கோவையில் 80 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சிட்பண்ட் நிறுவனம்

கோவையில் 80 ஆயிரம் பேரிடம், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி தனியார் சிட்பண்ட் நிறுவன அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு 36 கிளைகள் உள்ள நிலையில், டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளித்ததை தொடர்ந்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 350 பேர் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அந்நிறுவன அலுவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

Exit mobile version