கும்கிகள் உதவியுடன் சின்னதம்பியை காட்டுக்கு அனுப்ப திட்டம்

கரும்பு தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள சின்ன தம்பியை வனப் பகுதிக்குள் அனுப்புவதற்காக கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில நாட்களாக கிருஷ்ணபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் தஞ்சம் அடைந்த சின்னதம்பி யானை நேற்று முன்தினம் அருகில் இருந்த செங்கழனிப்பூதூரில் புகுந்தது. அதன்பின்னர், மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலத்தை கடந்து சென்று விட்டு மீண்டும் அதிகாலையில் கண்ணாடி புத்தூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது.

சின்னத்தம்பி யானையை வனப்பகுதிநோக்கி அதன் போக்கிலே நகர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த கலீம் மற்றும் மாரியப்பன் என்ற கும்கி யானைகள் தற்போது சின்னத்தம்பி இருக்கும் இடத்தை நோக்கி கொண்டு வரப்படுகின்றன. தொடர்ந்து சின்னதம்பியின் நகர்வை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version