குறும்புத்தனம் செய்யும் சின்னதம்பி யானை

உடுமலை அருகே கண்ணாடி புத்தூர் வாழைத்தோப்பில் தஞ்சம் அடைந்துள்ள சின்னத்தம்பியை, கண்டு ரசிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, கண்ணாடி புத்தூர் வாழைத்தோப்பில் உள்ள வயலில், 13- வது நாளாக சின்னதம்பி யானை தஞ்சம் அடைந்திருக்கிறது. இந்நிலையில், வாழைத்தோப்பில் முகாமிட்டிருந்த சின்னதம்பி, அருகில் உள்ள வெங்காய காட்டிற்கு சென்ற போது , அங்கு தன் மீது விழுந்த சாக்குபையை அகற்றுவதற்காக அங்கும் இங்கும் ஓடி, நடனமாடியவாறு சுற்றி திரிந்தது. இவ்வாறு, மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல், சின்னதம்பி செய்யும் செயல்கள், அங்குள்ள மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதனால், சின்னதம்பியை பார்க்க, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்து ரசிக்கின்றனர். வனத்துறையினர் சின்னதம்பி குடியுருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போதும், சின்னதம்பி செய்யும் குறும்புச் சேட்டைகளையும் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

Exit mobile version