திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் இருந்து தப்பி வந்த சின்னத்தம்பி யானை மடத்துக்குளம் பகுதியில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை தடாகம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு விளைநிலங்களை சேதப்படுத்திய சின்னத்தம்பி யானையை கும்கி யானை உதவியுடன் பிடித்த வனத்துறையினர், பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி கோட்டூர் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. அங்கிருந்து தீவாலப்பட்டி கிராமத்தில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது.
இந்தநிலையில், மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் புகுந்துள்ள சின்னத்தம்பி யானையை விரைவில் மயக்க ஊசி போட்டு பிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வன அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post