உடுமலை அருகே வாழைத்தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமான கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில நாட்களாக கிருஷ்ணபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் தஞ்சம் அடைந்த சின்னதம்பி யானை நேற்று முன் தினம் அருகில் இருந்த செங்கழனிப்பூதூரில் புகுந்தது.
அதன்பின்னர், மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலத்தை கடந்து சென்று விட்டு மீண்டும் அதிகாலையில் கண்ணாடி பூத்தூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. அருகில் இருந்த வாழை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை ருசி பார்த்த சின்னதம்பி பின்னர் வாழை தோட்டத்திலயே பதுங்கியது.
இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் திருப்பூர் மாவட்ட வன அலுவலர்கள் வாழைத் தோட்டத்திற்கு சென்று சின்னதம்பியின் நடமாட்டத்தை காண்காணித்து வருகின்றனர். மேலும், வனத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைந்து சின்னதம்பியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.