முதன்முறையாக மின் வசதி பெற்ற சின்ன மயிலாறு மலை கிராமம்

காரையார் வனப்பகுதிக்குட்பட்ட மயிலாறு கானி குடியிருப்பு மலை கிராமம் முதன்முறையாக மின்சார வசதி பெற்றுள்ளதால் பழங்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

நெல்லை மாவட்டம் காரையார் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சின்ன மயிலாறு, அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சேர்வலாறு காணிக்குடியிருப்பு ஆகியவை உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து சின்னமயிலாறு காரையார் காணிக்குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், 72 ஆண்டுகள் கழித்து சின்ன மயிலாறு கிராமத்தில் உள்ள 48 வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version