கொரோனாவில் இரண்டாவது அலை வீசும் என்பதால், அடுத்தகட்ட ஆபத்தும், சவால்களும் உள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை வூஹான் நகரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்தநிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா அலை வீசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தநிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.