16 அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து சீன உத்தரவு

16 வகையான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு, சீனா வரி விலக்கு அளித்துள்ளது.

அமெரிக்கா- சீனா இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே எந்தவித ஒப்பந்தமும் கையெழுத்தாகததால், இரு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தி வந்தன. இந்நிலையில் பொருளாதார மந்த நிலை காரணமாக 16 வகையான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா அரசு வரிவிலக்கு அளித்து சலுகை வழங்கியுள்ளது. இந்த வரிவிலக்கானது வரும் 17ஆம் தேதி அமலாகும் என்றும், இது ஒரு ஆண்டுக்கு மட்டும் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

Exit mobile version