சீனாவுடனான வர்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும்-அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய நாடுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் சீனா-பாகிஸ்தான் வர்த்தக வழித்தடம், உண்மையில் சீனாவுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியைத் தான் ஏற்படுத்தும் எனவுன் அவர் கூறியுள்ளார். மேலும் கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்து வழித்தடத்தை பாகிஸ்தானில் சீனா அமைத்தாலும், அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக அந்த நாடு தனது நிறுவனங்களையும், தொழிலாளர்களையுமே அனுப்புவதை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..

Exit mobile version