உலகின் மிக நீண்ட கடல் பாலம் !

இந்திய மதிப்பில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்பட்டது.

ஹாங்காகில் இருந்து சீனாவின் சுஹாய் நகரை இணைக்கும் உலகின் மிகப்பெரும் கடல் வழிப்பாலம் கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. பயண நேரத்தை 3 மணி நேரம்  குறைக்கும்  விதமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 55 கிலோ மீட்டர் நீண்ட இந்த பாலத்தின் கட்டுமான பணிக்காக 20 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

இந்த பாலம் 6 புள்ளி 7 கிலோ மீட்டர் வரை கடலுக்கு அடியில் செல்கிறது. 8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் மற்றும் 340 கிலோ மீட்டர் வேகம் கொண்ட புயல் காற்று உள்ளிட்டவையை எதிர்கொள்ளும் விதமாக கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 120 வருடங்கள் வரை அசைக்க முடியாத வலிமை வாய்ந்தது என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த பிரமாண்ட பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கடல்வழி பாலமானது நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version