ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 துணை ராணுவத்தினர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதியால் கொல்லப்பட்டனர். இதையடுத்து . ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன.
இது தொடர்பாக தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகளும் இந்த பட்டியலில் மசூத் அசாரை சேர்த்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க தயாராக இருந்தபோதும், சீனா அவருக்கு தடைவிதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தது.
இதன் மூலம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.