ஆப்பிளை, நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்க சீனா திட்டம்!!

கொரோனா வைரஸ் பரவலின் போது ஏற்பட்ட பரஸ்பர குற்றச்சாட்டுக்களை அடுத்து, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக பனிப்போர் துவங்கியுள்ளது. அண்மையில், சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்க சீனா தயாராகி வருவதாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா தொடங்கியுள்ள இந்த நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், சிஸ்கோ சிஸ்டம்ஸ், குவால்கம் போன்ற நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தவும், அவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து போயிங் விமானங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Exit mobile version