அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன அதிபர் ஜி ஜிங்பின் ஆலோசனை நடத்த இருப்பதாக சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளனர். இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சாங் ஹன்ஹோய், நரேந்திர மோடியும், ஜி ஜிங்பிங்கும் சிறந்த நண்பர்கள் என்றார். இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா, அமெரிக்கா இடையே நிலவும் பொருளாதார பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர, அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் ஆலோசிக்க இருப்பதாக கூறிய சாங் ஹன்ஹோய், அமெரிக்காவின் அடாவடித்தனமான நடவடிக்கை சீனாவுக்கு மட்டுமல்ல உலக பொருளாதாரத்தையே நேரடியாக பாதிக்கும் என தெரிவித்தார்.