ஹாங்காங் எல்லையை நோக்கி சீனா தனது படைகளை குவித்து வருகிறது -டிரம்ப்

ஹாங்காங் எல்லையை நோக்கி சீனா தனது படைகளை குவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு மாற்றம் செய்யும் அரசின் முடிவு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான ஹாங்காக் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலகக் கோரி போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில் சீனா தனது படைகளை ஹாங்காக் எல்லையில் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு இருநாடுகளின் எல்லையில், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version