அமெரிக்கா மீது சீனா பொருளாதாரத் தடை விதிப்பு

ஐரோப்பிய நாடுகளையும், ஐநா சபையையும் கைக்குள் வைத்துக் கொண்டு உலக முழுவதும் ஜாம்பவனாக வலம் வந்த அமெரிக்காவின் மீதே பொருளாதார தடை விதித்து, உலக நாடுகளை அதிரவைத்துள்ளது ட்ராகன் நாடானா சீனா.

ஈரான், ரஷ்யா, கியூபா, ஈராக், வடகொரியா என தன்னை எதிர்க்கும் அனைத்து உலக நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதித்து வந்த அமெரிக்காவிற்கு இது பெரும் இடியாக விழுந்தது.

ஹாங்காங்கில் அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்தியும், ஜனநாயக உரிமை கோரியும் ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்புகளையும் மீறி அந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதன்முறையாக அமெரிக்கா மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா போர்க்கப்பல்கள் சீனாவின் எல்லைக்குள் வர முடியாது எனவும், அமெரிக்காவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீனாவில் செயல்படவும், தடை விதித்துள்ளது.

ஏற்கனவே சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளிடையே உறவு மேலும் மோசமாக வாய்ப்புள்ளது. வர்த்தக போட்டியாலும், வல்லரசு கனவாலும் கண்மூடித்தனமாக செயல்பட்டு வரும் நாடுகளால் உலகம் மற்றோரு யுத்தத்திற்கு தயராகி வருகிறது என்பதே நிதர்சனம்….

Exit mobile version