கொரோனா வைரஸை உருவாக்கியது சீனாவா?

கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் அல்ல, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை உருவாகியதே சீனா தான் என்று இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானி குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது.சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவ தொடங்கியது. காற்றில் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் பிற மாகாணங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதாகவும் இதுவரை சீனாவின் 14 நகரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

கொரோனா சீனா மட்டும் அல்லாது  மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.இது மேலும் பரவுவதைத் தடுக்க வுகான் உட்படப் பல நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.இதற்கேன தனி மருத்துவமனையினை சீன அரசு அமைக்கும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியான  தகவலை . இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம்  உலக நாடுகளுக்குத் தெரியாமல் சீனா பயோ-வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தி வருவதாகவும்.வுஹானில் இதற்கான ஆய்வுக்கூடங்களை சீன அரசு உருவாக்கி நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஜூலையில் வெளியான ஒருஆய்வுக்கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும்.

அதில் ஒரு ஆய்வகத்தில் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன என்று எனக்குத் தகவல்கள் கிடைத்தாகவும்  கூறுகிறார், இந்த ஆய்வுகூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுப் பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுகூடத்தில் ஏதேனும் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பரவியிருக்கலாம். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இவரின் குற்றச்சாட்டை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள சீனாவின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு அமைப்பு, இது அமெரிக்காவின் பொய்  பிரச்சாரம் என பதில் கூறியுள்ளது. வுஹான் நகரின்  இறைச்சி சந்தையில் இருந்து  கரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என கூறியுள்ளது சீன சகாதாரத்துறை .

இஸ்ரேலைச் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய  டேனி ஷோஹம், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உலகளவில் உயிரியல் தொடர்பான ஆய்வுகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் கொரோனா வைரஸ் ஐ உருவாக்கியது சீனாவா? என்பதற்கான பதிலை காலம் தான் கூறவேண்டும்..

Exit mobile version