சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 490ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய், உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்நாட்டில், நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 887 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. 431 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், சீனாவில் இதுவரை 24 ஆயிரத்து 324 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கேரளாவில், 2 ஆயிரத்து 421 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து வந்தவர்கள், 28 நாட்கள் வெளியில் செல்லாதவகையில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.