இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் -சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமிதம்

இந்தியா மற்றும் சீனா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சீனா மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரிகம், நீண்ட நெடிய வரலாறு மற்றும் சிறப்பான பெருமைகளை கொண்டது என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆழமான பரஸ்பர அரசியல் நம்பிக்கை, கலாச்சார பரிமாற்றம், சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமாக சீனா-இந்தியா இடையேயான உறவு, முன்னேற்ற பாதையில் நகர்வதாகவும் ஜின்பிங் கூறியுள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உயர்நிலை பேச்சுவார்த்தை இருநாட்டு உறவில் மேலும் பலத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version