சீனாவில் பார்வையாளர்களை பிரமிக்க வைத்த விமான சாகசங்கள்

சீனாவில் விமான கண்காட்சியையொட்டி நடைபெற்ற பல்வேறு நிறுவன போர் விமானங்களின் சாகச காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்து. சீன நாட்டின் கடற்கரையோர நகரமான ஜூஹாயில், நடப்பாண்டுக்கான விமான கண்காட்சி, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மொத்தமாக 6 நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சியை ஒட்டி, போர் விமானங்களின் பிரமாண்ட சாகசங்கள் நடைபெற்றன. நீல வானில் விமானங்கள் ரக்கையை விரித்தபடி பறந்தன , பல வண்ணங்களில் புகையை உமிழ்ந்தபடி, சாகசங்களையும் நிகழ்த்திக்காட்டின. போர் விமானங்கள் ஒன்றோடொன்று மோதாமல் மிக நெருக்கத்தில் வந்து திரும்பிய காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Exit mobile version