இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஏற்படுத்துமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு உறவை பலபடுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றநிலை உருவாகியிருப்பதால் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிக்கான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்க எந்த சூழ்நிலையிகும் சீனா உதவியாக இருக்கும் என்று கூறிய சீன அதிபர், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை பாகிஸ்தான் தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார்.