கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சீனா வெளிப்படைத் தன்மையை கடைபிடித்து வருவதாக அமெரிக்காவிற்கான சீன தூதர் சுய்தியன் காய் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் தேசிய வானொலிக்கு பேட்டி அளித்த அவர், கொவைட் – 19 எனப்படும் கொரோனா வைரஸை ஒழிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீன பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சீர்படுத்த சீனா முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீன சரியான முறையில் கையாளவில்லை என்று குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அவர், உலக நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சீனா வெளிப்படைத் தன்மை கடைபிடித்து வருவதாக தெரிவித்தார்.