சீனா, பாகிஸ்தான் இடையே 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் நிதி உதவி பெற முடிவு செய்த இம்ரான்கான், முதலில் சீனாவின் உதவியை நாட முடிவு செய்தார்.
அதன்படி சீனாவிற்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். பின்னர், இரு நாடுகளும் இடையே விவசாயம், தொழில் உள்ளிட்ட 16 துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா செய்யும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கோங் சுவான்யூ உறுதியளித்தார்.