பெரியகுளம் பகுதியில் புது ரக மிளகாய் பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் இடு பொருட்கள் மற்றும் கடன்வசதி செய்து தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில், விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். மேலும் உழவு, நாற்று, களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளிப்புப் போன்ற பணிகளுக்கு அதிக வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் சந்தைகளில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆகையால் தற்போது பயிரிட்டுள்ள புது ரக மிளகாய் பயிருக்கு, மானிய விலையில் உரம், இடுபொருட்கள் வழங்கினால், தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.