திருப்பூரில் பட்டதாரி நண்பர்கள் இணைந்து தயாரித்த சில்5 செயலி!1

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலிக்கு மாற்றாக, புதிய செயலியை அறிமுகப்படுத்தி, திருப்பூரை சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் அசத்தியுள்ளனர்.

இந்திய – சீன எல்லை பிரச்னையை தொடர்ந்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பிற செயலிகளை விட, டிக்டாக் தடை செய்யப்பட்டது, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மாற்றான செயலியை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து, சில் 5 என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். வெங்கடேஷ், ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப் மற்றும் கோகுல் ஆகியோர் இணைந்து கண்டு பிடித்துள்ளனர். டிக்டாக்கின் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலியை, தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், இதன் சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version