குழந்தைகளின் தவறான படம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – செய்தி தொகுப்பு

குழந்தைகள் தவறான படம் தொடர்பாக உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட உலகளாவிய நடவடிக்கை குறித்த செய்தி தொகுப்பு…

தமிழகத்தில் குழந்தைகளின் தவறான படங்களை பார்த்தவர்கள் , பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள் , கம்ப்யூட்டர் ஐ . பி முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடந்த 4 ஆண்டுகாலமாக குழந்தைகளின் தவறான வீடியோக்களை டவுன்லோடு செய்து , பேஸ்புக் குரூப் அமைத்து அனுப்பி வந்ததாக திருச்சி பாலக்கரை, காஜாப் பேட்டை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கிரி என்கிற கிறிஸ்டோபர் அல்போன்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் இவர் ” நிலவன் நிலவன் ” ஆதவன் ஆதவன் ” என்கிற பெயரில் பேஸ்புக் பக்கத்தை தொடங்கி அதில் குழந்தைகளின் தவறான வீடியோக்களை பதிவிட்டு வந்தது தெரியவந்தது .

தமிழகத்தில் தொடங்கியிருக்கும் இந்த கைது நடவடிக்கை திடீரென்று வந்ததல்ல. கொரிய நாட்டை சேர்ந்த வூ சன் என்ற நபரை கடந்த வருடம் காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழைந்தைகள் தொடர்பான தவறான படங்களை வைத்து பல கோடிக்கு உலகம் முழுவதும் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.

வூ சன் நடத்திய இணையதளத்தில் 2,50,000 தவறான படங்கள் இருந்ததாகவும் அதில் 45% படங்கள் புதியதாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக காணாமல் போன மற்றும் தவறாக பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வூ நடத்திய ஆபாச இணையதளத்தில் விடீயோக்களை பதிவேற்றம் செய்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் அதுமட்டும் அல்லாமல் இந்த ஆபாச இணையதளத்தில் இந்திய மதிப்பு படி 25,000 ருபாய் மதிப்புள்ள பிட் காயினை கொடுத்து 6 மாதத்திற்கு கணக்கற்ற வீடியோக்களை பதிவிறக்கமும் செய்யலாம். இப்படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்து வியாபாரம் செய்த வூ சன்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் உலகம் முழுவதும் 337 நபர்கள் குழந்தைகள் தவறான படம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபருக்கும் வூ சன் போன்ற தவறான இணையத்தை நடத்தியவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை… ஆனால் தற்போது உலகம் முழுவதும் தொடங்கியிருக்கும் இந்த குழந்தைகள் தவறான படம் தொடர்பான குற்றாவளிகளின் கைது நடவடிக்கையால் குழைந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றே நிச்சயம் நம்ப முடியும்.

Exit mobile version