குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி

ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் தாத்தா, பாட்டி பேரக்குழந்தைகளுக்கான நடைப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி, தாத்தா பாட்டி பேரக்குழந்தைகளுடன் நடைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தாத்தா பாட்டிகளுடன் பேரக்குழந்தைகள் நேரத்தை செலவிடுவது அரிதாகி வரும் இக்காலத்தில், இது போன்ற நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை தருவதாக போட்டிகளில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

Exit mobile version