சேலத்தில் குழந்தைகளுக்கான திரைப்பட விழா துவக்கம்

சேலம் மாவட்டத்தில் துவங்கியுள்ள 3 நாள் குழந்தைகள் திரைப்பட விழாவில், 52 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் இணைந்து, மாணவர்களுக்கான திரைப்பட விழாவை துவக்கியுள்ளது. இந்த விழா, சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 5 தனியார் திரையரங்குகளில், 3 நாட்கள் நடைபெறுகிறது.

திரைப்பட விழாவை, மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்தார். இதில், 114 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 936 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். காலை 9 மணிமுதல் ஒன்றரை மணிநேரம், 5 திரையரங்குகளில் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இந்த திரைப்படங்கள் மூலம், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version