மதுரையில் தனியார் காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, அங்கிருந்த நூறு குழந்தைகள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டதாக ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழந்தைகளை விற்றவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் முன்பே நடந்திருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். மயானங்களில் போலி ஆவணங்கள் தயாரித்த விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாக அனீஷ் சேகர் தெரிவித்தார்.