தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை வர்த்த ரீதியாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொம்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். 3 ஆயிரம் IP முகவரியில்
தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் சிறார் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளதாக கூறினார். தமிழகத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இதனை பொழுதுபோக்காக செய்து கொண்டு இருந்தார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். கைதானவர்களில் யாராவது சிறார் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி கூறினார். சென்னையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக சுமார் 75 IP முகவரிகள் அனுப்பப் பட்டுள்ளதாகவும், சிறார் ஆபாச படங்களை பார்த்தவர்களின் அடுத்த பட்டியல் தயாராக உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்தார்.