அரக்கோணம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து லோடு ஆட்டோ மூலம் அரக்கோணத்தை அடுத்த ராமாபுரத்திற்கு இறுதி சடங்கிற்காக சிலர் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்ட ஆட்டோ, அன்வர்தி கான்பேட்டை அருகே நிலை தடுமாறி வயல் வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 11வயது சிறுவன் உயிரிழந்தான். படுகாயம் அடைந்த 4 சிறுவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.