பெண் ஊழியர்களை போன்று ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டு குழந்தைகள் வரை வைத்திருக்கும் மத்திய அரசின் பெண் ஊழியர்கள் ஆண்டிற்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதேபோன்று விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண் தனியாக குழந்தையைப் பராமரிக்கும் ஊழியராக இருந்தால், அவரின் பணிக்காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் 365 நாட்களுக்கு 100 சதவிகித சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவிகித சம்பளமும் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.