தலைமைச் செயலாளர் சண்முகம், ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதற்கட்டமாக தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களான மதுரை,திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, இராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம்,வேலூர், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுடனும், ஆலோசனை நடத்தினார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அவர் அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது.

Exit mobile version