மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச்செயலகத்தில் இருந்து, இன்று 11 மணிக்கு காணொலி மூலம், ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version