ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு, ராஜீவ் ரஞ்சன் விளக்கம் அளித்தார்.

மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

Exit mobile version