முதல்வரின் இன்றைய தேர்தல் சுற்றுப் பயண விவரம்

தென் மாவட்டங்களில் உள்ள 4 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார். காலை 8.30 ,மணிக்கு சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து இளையான்குடியில் பேசுகிறார். காலை 10 மணிக்கு மானாமதுரையிலும் 10.45 மணிக்கு திருபுவனத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.

பகல் பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து கோவில்பட்டியில் பேசுகிறார். 3.45 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்திலும் 4.30 க்கு சாத்தான்குளத்திலும் தமிழிசையை ஆதரித்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திசையன் விளையில் பேசுகிறார்.

மாலை 5.45 மணிக்கு நவ்வலடி வழியாக கூடங்குளம் சென்று வாக்கு சேகரிக்கிறார். இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தோவாளையில் வாக்கு சேகரிக்கிறார். இரவு 8 மணிக்கு நாகர்கோவிலிலும் 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.

Exit mobile version