திருவாரூர் மாவட்டத்தில், நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருத்துறைப்பூண்டியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வயலில் இறங்கி மழையால் சேதமடைந்த பயிர்களை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
மேலும், சேதமடைந்த விளை நிலங்களின் நிலவரம் குறித்து விவசாயகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, கொக்கலாடி, பாமணி ஆகிய பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமமடைந்த பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சாய்ராம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் மதிய உணவு பரிமாறினார்.