சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், பொதுப்பணித் துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 14ஆம் தேதி, 2020-2021 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், வரும் மார்ச் 9ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதே போல், பொதுப்பணித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டங்களான குடிமராமத்து திட்டம், நதிநீர் பங்கீடு திட்டம், உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பொதுப்பணித் துறை செயலாளர்கள் உடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
இதே போல், பொதுப்பணித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டங்களான குடிமராமத்து திட்டம், நதிநீர் பங்கீடு திட்டம், உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பொதுப்பணித் துறை செயலாளர்கள் உடனும் ஆலோசனை மேற்கொண்டார்.