முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் திங்கட்கிழமை, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 30ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது. இந்நிலையில், முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதில் ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.