பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுப் பிசானப் பருவ சாகுபடிக்காகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை 20 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாயப் பெருமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version