முல்லைப் பெரியாறு, வைகை அணைகளிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி மாவட்டத்தின் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன் தேனி, உத்தமபாளையம், போடி பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதேபோல் வைகை அணையிலிருந்து 45 நாட்களுக்கு நாளொன்றுக்கு 900 கன அடி வீதம் அனைத்து கால்வாய்களிலும், அதன்பின்னர் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும். இந்த நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு அணைகளிலிருந்தும் நாளை முதல் நீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version