திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து, நாளொன்றுக்கு ஆயிரத்து 500மில்லியன் கன அடி வீதம் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்வலாறு அணை மற்றும் மணிமுத்தாறு அணை ஆகிய அணைகளிலிருந்து , பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ம் தேதி வரை, 20 நாட்களும், நாளொன்றுக்கு ஆயிரத்து 500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் விவசாயப்பெருமக்கள் நீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் திருநெல்வேலி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 62 ஆயிரத்து 107 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.