விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து நாளை மறுநாள் முதல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் திறப்பு மூலம் ஆயிரத்து 928 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மகசூல் அதிகம் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.