ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் மக்களின் வேண்டுகோளை ஏற்று வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயக்கட்டு பகுதிகளுக்கு வரும் 4 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அந்தியூர் வட்டத்திலுள்ள 2ஆயிரத்து 924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் விவசாய மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.