தண்ணீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையிலும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கி அனைத்து பணிகளையும் முடிக்கிவிட்டு, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மாவட்ட அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Exit mobile version