தமிழக மீனவர்களுக்கு இ – பாஸ் வழங்க கோரி கேரள முதலமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!

மீன்பிடி படகுகளை பராமரிக்கும் வகையில், தமிழக மீனவர்களுக்கு இ – பாஸ் வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கேரளாவின், பல்வேறு மீன்பிடித்துறை முகங்களிலும், மீன்பிடித் தளங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளார். ஊரடங்கு காரணமாக, 3 மாதங்களாக படகுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமலும், மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாமலும் மீனவர்கள் முடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே கேராளவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பராமரிக்கும் வகையில், தமிழக மீனவர்களுக்கு உடனடியாக இ – பாஸ் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மேற்கு கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version