புயல், வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக நாகை சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்காவில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
நிவர் புயல் சேதம் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்றுஆய்வு மேற்கொண்ட அவர், நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் உள்ள குளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து, சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் முதலமைச்சர் பங்கேற்றார். குல்லா அணிந்தபடி, தொழுகையில் பங்கேற்ற முதலமைச்சர், தர்கா ஆண்டவர் சன்னதிகளில் துவா செய்தும் வழிபட்டார்.
முன்னதாக நாகூர் செல்லும் வழியில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டார். பிராத்தனைக்கு பிறகு ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் முதலமைச்சருக்கு நினைவு பரிசினை வழங்கினர்.