கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைப்பதுடன், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, சிறு, குறு-நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயவுதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், சேலத்திற்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா கிளினிக்கை தொடங்கி வைக்கிறார்.