முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருகிற 1ம் தேதி கூடலூர், குன்னூர், உதகை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா, பெருந்துறை, பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிக்கிறார்.
இதே போல், வருகிற 2ம் தேதி மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, சங்ககிரி, சேலம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிக்கிறார்.
வருகிற 3ம் தேதி சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். நாட்றம்பள்ளி, மேச்சேரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிக்கிறார். மேலும், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதேபோல் வருகிற 4ம் தேதி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.