என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். மேலும் படுகாயம் அடைந்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து விசாரித்தார் என தெரிவித்துள்ளார். இதில் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருவதாக அவரிடம் கூறியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post