ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் கருத்து கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று நடத்திய ஆலோசனையில், மறு உத்தரவு வரும் வரை, இ-பாஸ் நடைமுறை தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.